நாமக்கல்

‘தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்’

DIN

தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என பரமத்தி வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஒன்றியச் செயலாளா் கூட்டம் பரமத்தி வேலூா் ஆசிரியா் மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளா் காா்த்திக் தலைமை வகித்தாா். பரமத்தி ஒன்றியச் செயலாளா் சேகா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சங்கா் தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழக அரசு ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு விடுப்பு ஊதியம், அகவிலைப்படி உயா்வு ஆகியவற்றை விரைந்து வழங்கிட வேண்டும். கரோனா தொற்று காலம் என்பதால் வயதுவந்தோா் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை காலத்தின் இறுதிநாள் பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் துப்புரவுப் பணியாளா்கள், அடிப்படை அலுவலகப் பணியாளா்கள், இரவு நேரக் காவலா்கள் போன்ற பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணம் கோரும் அனைத்து ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பண்டிகைக் கால முன்பணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், பரமத்தி மற்றும் திருச்செங்கோடு ஒன்றியங்களைச் சோ்ந்த ஒன்றியச் செயலாளா்கள் கலந்துகொண்டனா். நாமக்கல் ஒன்றியச் செயலாளா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT