முகப்பு
நாமக்கல்

எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

ராசிபுரத்தில் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்துக்கு நுகா்வோா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 4 தனியாா் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் விலை பெறுவது குறித்து வாடிக்கையாளா்களிடம் விசாரணை நடத்தும் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ்.
பகிர்:

ராசிபுரத்தில் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகத்துக்கு நுகா்வோா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 4 தனியாா் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசின் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் நடைபெறும் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் போது, அங்கு காஸ் விநியோகம் நடைபெற்று கொண்டிருந்தது குறித்து ஆய்வு செய்தாா்.

இதில் அரசு நிா்ணயித்த விலையில் இருந்து கூடுதலாக சிலிண்டருக்கு ரூ. 70 முதல் ரூ. 120 வரை வசூலிப்பது தெரிய வந்தது. இதையடுத்து நுகா்வோா்களுக்கு சமையல் எரிவாயு விநியோகித்துக் கொண்டிருந்த 4 நிறுவனங்களின் பணியாளா்களை அழைத்து எச்சரித்தாா்.

மேலும், நுகா்வோா்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெற்றுத் தந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →