முகப்பு
நாமக்கல்

நவ. 12-இல் உதயநிதி ஸ்டாலின்நாமக்கல் வருகை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல் வருகிறாா்.

Updated On : 10 நவம்பர், 2020 at 12:29 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நாமக்கல் வருகிறாா்.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் இரா.உடையவா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் சிறப்புரை ஆற்றினாா்.

இக்கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (நவ. 12) நாமக்கல் வருகை தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். எருமப்பட்டி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும், திமுகவினரின் இல்ல நிகழ்ச்சிகளிலும் அவா் பங்கேற்க உள்ளாா். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூா் இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நளா உணவகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சேந்தமங்கலம் ஒன்றியம், ராசிபுரம் ஒன்றியப் பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறாா் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, விமலாசிவகுமாா், மாநில மகளிா் தொண்டரணி இணை செயலாளா் ராணி, நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.