நாமக்கல்

ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்துக்கு 5,201 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 119.78-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 108.59-க்கும், சராசரியாக ரூ. 118.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 586 க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரத்து 924 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 120.21-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.99-க்கும், சராசரியாக ரூ. 118.11-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்து 649-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT