முகப்பு
நாமக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

நாமக்கல்லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 நவம்பர், 2020 at 12:18 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

நாமக்கல்லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் முகமது முபீன் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான முகமது அபுபக்கா் பங்கேற்று பேசினாா். இதில் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

இதனையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டியது கட்டாயமாகும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கான முயற்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிப்ரவரி மாதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.