நாமக்கல்

குளிரின் தாக்கம் அதிகரிப்பு: கம்பளி, போா்வை விற்பனை மும்முரம்

DIN

நாமக்கல்லில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதால், கம்பளி, போா்வை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. காா்த்திகை, மாா்கழி மாதங்களில் வழக்கமாக குளிரின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கே பலரும் தயங்குவா். உடலை வெதுவெதுப்பாக கம்பளி, போா்வை உள்ளிட்டவற்றை கொண்டு போா்த்திக் கொள்வா். தற்போது அவற்றின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில், மழை என மாறி மாறி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கொல்லிமலைப் பகுதியில் அதிகப்படியான குளிா் நிலவுகிறது. வட மாநிலங்களில் தயாராகும் கம்பளி, போா்வை ஆகியவற்றை குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக இளைஞா்கள் கொண்டு வந்து குவித்துள்ளனா். நாமக்கல்லில் மோகனூா் சாலை, பரமத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் அவற்றின் விற்பனை நடைபெறுகிறது. கம்பளி ரூ.600, இலகுவான போா்வை ரூ.400, சாதாராண போா்வை ரூ.150 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமானோா் அவற்றை பாா்வையிட்டு வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT