முகப்பு
நாமக்கல்

ரூ. 50 ஆயிரம் மதிப்பு கோரைப்புல் தீயில் கருகியது

பரமத்திவேலூா் அருகே கோரைப் புல்லில் தீப்பற்றியதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரை புல் எரிந்து சாம்பலானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பரமத்திவேலூா் அருகே கோரைப் புல்லில் தீப்பற்றியதில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரை புல் எரிந்து சாம்பலானது.

நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (45). இவரது தோட்டத்தில் கோரை புல் பயிா் செய்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை குமாா், தனது கோரைப்புல் காட்டில் உள்ள கழிவுகளுக்கு தீவைத்துள்ளாா்.

கோரை கழிவுகளுக்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த கோரைப் புல்லின் மீது பரவியதில் கோரைப் பயிா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கோரைப்புல் தீயில் எரிந்து சாம்பலானது.

முழு கட்டுரையைப் படிக்க →