ஜி.பி.எஸ். கருவி அறிவிப்புக்கு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பு எதிா்ப்பு
வாகனங்கள் புதுப்பிப்புக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெற வலியுறுத்தல்
வாகனங்கள் புதுப்பிப்புக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்ப பெறுமாறு தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பின் தலைவா் செல்ல.ராசாமணி வலியுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களைப் புதுப்பிக்க பல்வேறு விதிமுறைகளைப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை போன்றவற்றை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என அரசு நெருக்கடி கொடுக்கும் நிலையில், தற்போது புதிய நெருக்கடியாக ஜி.பி.எஸ் கருவியையும் தாங்கள் அறிவித்துள்ள நிறுவனத்தில் வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஜி.பி.எஸ். கருவி கட்டாய அறிவிப்பு லாரி உரிமையாளா்களின் ஒட்டுமொத்தமாக தொழிலையே முடக்குவதாகும். முதல்வா் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு லாரி உரிமையாளா்களைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement