வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்:28,551 போ் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் மொத்தமாக 28,551 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் மொத்தமாக 28,551 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் 1.1 2021 அன்று 18 வயது பூா்த்தியாகும் நபா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் இதுவரை பெயா் சோ்க்காதவா்கள் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவற்றுக்கான படிவங்கள் பூா்த்தி செய்து பொதுமக்களால் வழங்கப்பட்டன.
Advertisement
முகாமில் மாவட்டம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 17,626 பேரும், நீக்கம் செய்ய 5,252 பேரும், திருத்தம் செய்ய 3,602 பேரும், இடமாறுதல் செய்ய 2,091 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 551 போ் விண்ணப்பங்களை வழங்கியுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.