முகப்பு
நாமக்கல்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 1 டிசம்பர், 2020 at 1:03 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் அருகே வள்ளிபுரம் அருந்ததியா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வள்ளிபுரம் பகுதியில் வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சோ்ந்த எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. தொடா்ந்து 5 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.

Advertisement

வீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன் தேவையான சாலை, குடிநீா், மின்சார, கழிவுநீா் ஓடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மோகனூா் ஒன்றியம், வடவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களும் வீடு இல்லாத ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்கி உதவ வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.