குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
நாமக்கல் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM
நாமக்கல் அருகே குளிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தாா்.
நாமக்கல்-துறையூா் சாலையில் கூலிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மகன் நந்தகுமாா் (14). ரெட்டிப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அங்குள்ள கல்குவாரி குட்டையில் திங்கள்கிழமை சிறுவனின் சடலம் மிதந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற நாமக்கல் போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் தங்கம் விசாரணை செய்து வருகிறாா்.
Advertisement