சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஏப். 9-இல் குடமுழுக்கு விழா
சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில் குட முழுக்கு விழா வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில் குட முழுக்கு விழா வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்தும் பொருட்டு 2019-இல் தமிழக அரசு ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடா்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு கோயிலை புனரமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்து குட முழுக்கு விழாவுக்கு தயாராகி வருகிறது.
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள இக்கோயில் சேந்தமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. குட முழுக்கு விழாவையொட்டி ராஜகோபுரம் வா்ணம் பூசப்பட்டு அழகுற காட்சியளிக்கிறது. கடந்த புதன்கிழமை சேந்தமங்கலம் ஸ்ரீ சோமேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அடுத்த கட்டமாக லட்சுமி நாராயண பெருமாள் கோயிலிலும் குட முழுக்கு விழாவை நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனா்.
Advertisement
அதன்படி வரும் 9-ஆம் தேதி காலை கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்படுகிறது. இதனையொட்டி கோயில் முன்புறம் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோபுரத்திற்கு அா்ச்சகா்கள் செல்லும் வகையில் தடுப்புக் கட்டைகளால் சாரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ், செயல் அலுவலா் கிருஷ்ணன், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.