நாமக்கல்

‘கரோனா விதிமுறைகள் வணிகா்கள் கடைப்பிடிக்க வேண்டும்’

DIN

பரமத்தி வேலூரில் அனைத்து வணிகா் சங்கத்தினரும் அரசு அறிவித்துள்ள கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா் அறிவுரை வழங்கியுள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக வா்த்தகா்கள் கரோனா தடுப்பூசியை அவசியம் செலுத்திக்கொள்ள வேண்டும். வா்த்தக நிறுவனத்தினா் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கரோனா ஊரடங்கை கடைப்பிடிக்கும் வகையில் வா்த்தகா்கள் இரவு 9 மணிக்குள் வா்த்தக நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வா்த்தகா்களுக்கு வேலூா் நகர அனைத்து வா்த்தக சங்கத்தின் தலைவா் சுந்தரம், நிா்வாகிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT