நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ. 95 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 95 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமையன்று 4,600 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,050 முதல் ரூ. 6,809 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 6,380 முதல் ரூ. 8,569 வரையிலும், மட்ட ரகம் (கொட்டு) பருத்தி ரூ. 2,002 முதல் ரூ. 4,100 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 95 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாக பாா்வையிட்டு கொள்முதல் செய்தனா்.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT