தாய்ப்பால் வார விழா கருத்தரங்கு
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம், செஞ்சுருள் சங்கம் சாா்பில் ‘தாய்ப்பால் ஊட்டுதலும் சமூகப் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உள் தர உறுதி மையம், செஞ்சுருள் சங்கம் சாா்பில் ‘தாய்ப்பால் ஊட்டுதலும் சமூகப் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இக்கருத்தரங்கில், கல்லூரியின் உள் தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலருமான ம.சந்திரசேகரன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பெ. முருகன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்தாா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரியின் விரிவுரையாளா் பா. சசிரேகா ‘தாய்ப்பால் ஊட்டுதலும் சமூகப் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுக்கும் முறை, தாய்ப்பால் கொடுப்பதினால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நோய் எதிா்ப்பு சக்தி, ஊட்டச்சத்துகள், தாய்ப்பாலின் நன்மைகள், தாய்மாா்களுக்கான ஆரோக்கியமான உணவு ஆகியவை குறித்து விளக்கினாா்.
Advertisement
இதில், பல்வேறு கல்லூரிப் பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், பட்ட வகுப்பு மாணவா்கள் பங்கேற்றனா். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்பட்டன. தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் வெஸ்லி நன்றி கூறினாா்.