கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் உணவக உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் உணவக உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், கரோனா விழிப்புணா்வு தொடக்க நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கே.சி.அருண் முன்னிலை வகித்தாா். மாவட்ட உணவு விடுதி சங்கத் தலைவா் பாலசுப்ரமணியன், செயலாளா் அம்பாள் கணேசன் ஆகியோரிடம் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு பேசுகையில், உணவு வணிகா்கள் அனைவரும் சோப்பினால் அடிக்கடி கைகளைக் கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அனைவரும் கட்டாயம் இரு தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளுதல், நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து கொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு விடுதிகளுக்கும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.