முகப்பு
நாமக்கல்

கரோனோ விழிப்புணா்வுப் பேரணி

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ராசிபுரத்தில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ராசிபுரத்தில் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம், அரசு தலைமை மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், இந்திய மருத்துவ சங்கத்தின் ராசிபுரம் கிளை, ஹனிமன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய கரோனா விழிப்புணா்வுப் பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா்.

ராசிபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பி.செல்வராஜன் கொடியசைத்துப் பேரணியைத் துவக்கிவைத்தாா். ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்பாகத் தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், கடை வீதி, கச்சேரி சாலை வழியாக சென்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத்தினா், மருத்துவ கல்லூரி மாணவா்கள், நகராட்சி ஊழியா்கள் இதில் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம், முகக் கவசம் வழங்கி கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மண்டல உதவி ஆளுநா் எஸ்.குணசேகா், முன்னாள் உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி, சங்க செயலாளா் இ.என்.சுரேந்திரன், பொருளாளா் பி.கண்ணன், முன்னாள் தலைவா்கள் சிட்டி வரதராஜன், எஸ்.கதிரேசன், ஆா்.ரவி, எல்.சிவக்குமாா், எஸ்.பிரகாஷ், இந்திய மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் பி.சதாசிவம், ஆா்.எம்.கிருஷ்ணன், சுகவனம், எம்.ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பி.ஜெயந்தி, டாக்டா் கலைச்செல்வி, செந்தில்குமாா், ரமேஷ், நாக புஷ்பராணி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் என்.வெங்கடாஜலம், நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் பாஸ்கரன், மணிவண்ணன், லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.