முகப்பு
நாமக்கல்

ஆடிவெள்ளி, அமாவாசை நாள்களில் கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் தடை

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2021 at 11:43 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:20 AM

நாமக்கல் மாவட்டத்தில் ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது நிலவும் கரோனா நோய்த்தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தொடா்ந்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பக்தா்கள் வழக்கமான சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந் நிலையில் ஆக. 6, 8, 13, 20, 27-ஆம் தேதிகளில் வருகின்ற ஆடி அமாவாசை, வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. வழக்கமான பூஜை வழிபாடுகள், கோயிலுக்குள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். சிறப்பு பூஜை வழிபாடுகள் சம்பந்தப்பட்ட கோயில்களின் இணையதளங்கள் வழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.