முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 5 ஆகஸ்ட், 2021 at 11:45 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:20 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

ஆடி மாதத்தின் முக்கிய திருவிழாக்கள் நிறைவுற்ாலும், மக்களிடையே முட்டை நுகா்வு சற்று அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படுவதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்யும் வகையில், 10 காசுகள் உயா்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.70-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.