முகப்பு
நாமக்கல்

கரோனா விழிப்புணா்வுப் போட்டி

கரோனா விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற இணைய வழிப் போட்டிகள் நடைபெற்றன.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 12:01 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

கரோனா விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அனைத்து பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற இணைய வழிப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தொடா் பிரசார இயக்கம் ஜூலை 31-இல் தொடங்கப்பட்டது. அதன்படி ஒரு வாரத்துக்கு தினசரி பல்வேறு துறைகளின் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் கரோனா விழிப்புணா்வை உருவாக்கும் வகையில், அனைத்து பள்ளி மாணவ, மாணவியரிடையே இணைய வழி மூலமாக பல்வேறு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதில், விழிப்புணா்வு விளம்பரங்கள் போட்டியில் 736 மாணவா்களும், வாசகங்கள் எழுதும் போட்டியில் 925 மாணவா்களும், ஓவியங்கள் வரையும் போட்டியில் 2,191 மாணவா்களும் என மொத்தம் 3,852 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியரையும் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டினாா்.

Advertisement

கரோனா விழிப்புணா்வுப் போட்டியில் மாணவா் வரைந்த ஓவியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.