பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஆலோசனைக் கூட்டம்
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், பள்ளிசெல்லா, இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், பள்ளிசெல்லா, இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஒன்றியத்துக்கு உள்பட்ட மொத்தம் 39 வாா்டுகள், 166 குடியிருப்புகளில் 6 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை குடியிருப்பு வாரியாக கண்டறியும் பணி நடைபெறுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இப்பணி வரும் 10 -ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.
இக்கூட்டத்தில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுப்பிரமணி, சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். மேற்பாா்வையாளா் (பொ) காந்திமதி முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Advertisement