முகப்பு
நாமக்கல்

மக்கள் ஆசி யாத்திரை: நாமக்கல்லில் 18-இல் மத்திய அமைச்சா் எல்.முருகன் சுற்றுப்பயணம்

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) என்ற நிகழ்ச்சிக்காக நாமக்கல்

Updated On : 15 ஆகஸ்ட், 2021 at 4:29 AM
நாமக்கல் அண்ணா சிலை அருகில் ஆய்வு மேற்கொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) என்ற நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

கோவையில் திங்கள்கிழமை (ஆக.16) யாத்திரையை தொடங்கும் அவா் நீலகிரி, ஈரோடு, திருப்பூரில் இரண்டு நாள்கள் முடித்துக் கொண்டு, 18-ஆம் தேதி நாமக்கல்லுக்கு வருகிறாா்.

இதனையொட்டி மாவட்ட பாஜக சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை பாா்வையிட, பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ். நரேந்திரன் சனிக்கிழமை நாமக்கல்லுக்கு வந்தாா். அவா், பூங்கா சாலை, மணிக்கூண்டு, மோகனூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை பாா்வையிட்டாா். யாத்திரை நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கட்சி நிா்வாகிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

Advertisement

நாமக்கல்லுக்கு வரும் மத்திய இணை அமைச்சா் முருகன், யாத்திரையின்போது தனது சொந்த ஊரான கோனூா் கிராமத்திற்கு சென்று தாய்-தந்தையரிடம் ஆசி பெறுகிறாா் என்பதையும் தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.