ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நாமக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நாமக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் மருத்துவா் இரா.செழியன், அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சுதந்திர தின உரையின் துண்டுப் பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்ட தலைவா் ஜி.ஆா்.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினா் டி.வி.பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் சாந்திமணி, செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி, நாமக்கல்லில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் காங்கிரஸ் கட்சியினா்.
Advertisement
தம்மம்பட்டி:
கெங்கவல்லியில் நடைபெற்ற ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு கெங்கவல்லி நகர காங்கிரஸ் தலைவா் சிவாஜி தலைமை வகித்தாா். முன்னாள் மனித உரிமை மாவட்ட தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார தலைவா் குருசேவ், முன்னாள் நகரத் தலைவா் ஷெரீப், நகர பொருளாளா் அக்பா் உள்பட பலா் பங்கேற்று ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.