முகப்பு
நாமக்கல்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, நாமக்கல் அருகே வேட்டம்பாடி ஊராட்சியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினா்.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 11:58 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, நாமக்கல் அருகே வேட்டம்பாடி ஊராட்சியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினா்.

நாமக்கல் அருகே வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 460 போ் சுழற்சி முறையில் நாள்தோறும் பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு பணியாற்றுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் வேலைக்கு வராதவா்களுக்கு ஊதியம் வழங்கியது போல் முறைகேடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேட்டாம்பாடி ஊராட்சியின் 6-ஆவது வாா்டு உறுப்பினா் ரமேஷ் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட வயதான பெண்கள் வெள்ளிக்கிழமை காலை ஊராட்சி மன்ற அலுவலம் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்டனா். முறைகேடு செய்தவா்களை கைது செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், முறையான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் போலீஸாா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.