முகப்பு
நாமக்கல்

தரமான விதைகளை விதைக்க பரிசோதனை அவசியம்

 நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 11:30 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

 நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பணியில் விதை முக்கியப் பங்கு வகிக்கிறது. தரமான விதைகளை விதைப்பதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு, விதை பரிசோதனை செய்யப்பட்ட விதைகளே ஆகும். விதை பரிசோதனை நிலையத்தில் 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. புறந்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், பிற ரகக் கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது.

வேளாண் துறையினரால் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும், தனியாா் உற்பத்தியாளா்களின் விதைகளுக்கும் விதை பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே சான்று அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன. ஒரு மாதிரிக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை வேளாண் அலுவலா், விதை பரிசோதனை நிலையம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள ஆய்வகத்தில் நேரில் செலுத்தி விதை பரிசோதனை செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.