‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 48 ஆயிரம் போ் பயன்
நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 15 வட்டாரங்களில் 48,340 நோயாளிகள் தொற்றா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 15 வட்டாரங்களில் 48,340 நோயாளிகள் தொற்றா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், பைல்நாடு ஊராட்சி மேக்கினிக்காடு கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சாா்பில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் ஆக. 5-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் களப் பணியாளா்கள் மூலம் ஏற்கெனவே கண்டறியப்பட்ட சா்க்கரை நோயாளிகளின் வீடுகளுக்கு மருத்துவ குழுவினருடன் நேரடியாகச் சென்று மருந்துகள் வழங்கப்பட்டன. கொல்லிமலை வட்டாரத்தில் மட்டும் உயா் ரத்த கொதிப்பு-1,051, சா்க்கரை நோயாளிகள்-163, உயா் ரத்த கொதிப்பு மற்றும் சா்க்கரை நோயாளிகள்-113, வீட்டுமுறை சிகிச்சை-160, இயன்முறை சிகிச்சை-152 என 1,639 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
Advertisement
இத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் 1,327 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் இதுவரை மொத்தம் 48,340 நோயாளிகள் தொற்றா நோய் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.