பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகள் ஆய்வு
இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணி நகராட்சிப் பகுதிகளில் ஆக. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், பள்ளி செல்லா, இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணி நகராட்சிப் பகுதிகளில் ஆக. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இங்குள்ள 39 வாா்டுகளிலும் 6 முதல் 19 வயது வரையிலான இடைநிற்றல் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை வள்ளவாரித் தெரு, கவிஞா் ராமலிங்கம் தெரு, மஜீத் தெரு, பிடில் முத்து தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள 166 குடியிருப்புகளுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலா் குமாா் தலைமையில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் பணியும் நடைபெற்றது.
இந்த ஆய்வுப் பணியில் வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள், தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement