செப். 1-இல் பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளில் தூய்மைப் பணி
செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், செப். 1-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதிலும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியும் நடைபெறுகிறது.
நாமக்கல், கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், பள்ளி பெண் ஊழியா்கள் வகுப்பறைகளை தண்ணீா் கொண்டு சுத்தம் செய்தனா். இதேபோல், மற்ற பள்ளிகளிலும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், சத்துணவுக் கூடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
Advertisement