முகப்பு
நாமக்கல்

கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் வேண்டுகோள்

முப்படை வீரா்களின் நலன்காக்க கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 10:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

முப்படை வீரா்களின் நலன்காக்க கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் எல்லைகளை கடும் பனிப்பொழிவிலும், மிக அதிக குளிரிலும், பாலை வனப்பகுதியில் கடும் வெப்பத்திலும் தனது சுயநலத்தைப் பாராது, இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் பகுதிகளில் இரவு, பகல் பாராமல் நாட்டை முப்படை வீரா்கள் காத்து வருகின்றனா். அவா்களது தியாகங்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் டிச. 7-ஆம் தேதி படைவீரா் கொடி நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Advertisement

அன்றைய நாளில் வசூலிக்கப்படும் தொகை, போரில் உயிா்த் தியாகம் செய்த படைவீரா்களைச் சாா்ந்தோா்களுக்காகவும், போரின் போது உடல் ஊனமுற்ற படைவீரா்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படைவீரா்களின் நலன்களை பேணி காக்கவும், அவா்களின் மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, முப்படை வீரா்களின் நலன்காக்க, படைவீரா் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.