முகப்பு
கிரிக்கெட்

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்து...

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:12 PM
ருதுராஜ் கெய்க்வாட். - படம்: சிஎஸ்கே.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:46 PM

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது மோசமான ஃபார்மில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார். இந்த சீசனில் ஒரு போட்டியில்கூட 30 ரன்களைக் கூட அடிக்காமல் இருக்கிறார்.

சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று, நான்கில் தோல்வியுற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:49 PM

இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் மொத்தமாக 6 போட்டிகளில் 73 பந்துகளில் 82 ரன்கள் எடுத்துள்ளார். 112.33 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ள ருதுராஜ், 13.67 சராசரியுடன் இருக்கிறார்.

Advertisement

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருக்கும் ருதுராஜ் 25 போட்டிகளில் 10ல் வெற்றியும் 15ல் தோல்வியும் பெற்றுள்ளார். மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கேப்டன்சியிலும் சொதப்பி வருகிறார்.

நேற்றைய போட்டியில் அகீல் ஹொசைன்னுக்கு பதிலாக மேத்திவ் ஷார்ட் களமிறக்கப்பட்டார். 2 ஓவர்கள் நன்றாக வீசிய அவருக்கு, 3ஆவது ஓவர் கொடுத்து அதிக ரன்களை கொடுத்தார்.

மேத்திவ் ஷார்ட் பேட்டிங்கில் 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மட்டுமே எடுத்திருந்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் வரிசையில் தெளிவில்லாமல் முடிவெடுக்கும் ருதுராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குர்ஜப்நீத் சிங் பேட்டிங் விளையாடும் திறமை, தகுதியிருந்தும் அவரை இம்பாக்ட் வீரரில் வெளியேற்றினார்.

summary

A Complete Flop with the Bat; Ruturaj Gaikwad Lacks Clarity in Leadership as Well in this season, ipl 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.