முதல் கிரிக்கெட் மட்டை! 49 ஆண்டுகளாக பாதுகாக்கும் சச்சின்!
சச்சின் தனது முதல் கிரிக்கெட் மட்டையை இன்னும் பாதுகாத்து வைத்திருப்பது குறித்து...
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் கிரிக்கெட் பேட்டை 49 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
குழந்தையாக இருந்தபோது கிரிக்கெட் மட்டையை தாங்கிப் பிடித்தவாறு இருந்த படத்தையும் தற்போது அதே கிரிக்கெட் மட்டையை பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
1989-ம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஆட்டத்தில் முதல் முறையாக சச்சின் அறிமுகமானார். இதன் பிறகு கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு சச்சின் பெருமை தேடித்தந்துள்ளார்.
முதல் சர்வதேச போட்டியில் சச்சின் அறிமுகமாகி இன்றோடு 37 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் தனது சிறு வயதில் தான் கிரிக்கெட் மட்டையை வைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அத்தோடு அதே கிரிக்கெட் மட்டையை பிடித்தவாறு தற்போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படங்களுடன் தனது முதல் கிரிக்கெட் மட்டையை தான் இப்போதும் பாதுகாத்து வைத்துள்ளதாக சச்சின் பதிவிட்டுள்ளார்.
சச்சின் ஆடும் கிரிக்கெட் மட்டைக்கு பல்வேறு பெருநிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் கொடுத்திருந்தாலும் தனது முதல் கிரிக்கெட் மட்டையை மதிப்பு மிக்கதாக சச்சின் காத்து வருவதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.