FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டின் 149 ஆண்டுகால வரலாற்றில் ஜிம்பாப்வே புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே படைத்துள்ள புதிய சாதனை பற்றி...

37 வினாடிகள் முன்பு
ஜிம்பாப்வே - Photo: X | Zimbabwe Cricket
பகிர்:

சர்வதே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸிலும் 500 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது.

அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி, 504 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் 131 ரன்களும், பென்னெட் 128 ரன்களும் குவித்தனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 514 ரன்கள் குவித்து, 10 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 173, ரஹ்மானுல்லா 113, ஷெதிகுல்லா அடல் 105 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, 5-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 523 ரன்களை குவித்தது. கிரேக் எர்வின் 206, வெஸ்லி மதேவெரே 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம், 149 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இரு இன்னிங்ஸிலும் 500 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையை ஜிம்பாப்வே பெற்றுள்ளது.

summary

A new record created by Zimbabwe in the 149-year history of Test cricket!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.