FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்தும் ஜேக் எட்வர்ட்ஸ்..! சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸின் அசத்தலான ஃபர்பாமென்ஸ் குறித்து...

56 வினாடிகள் முன்பு
ஜேக் எட்வர்ட்ஸ் - படம்: எக்ஸ் / சிஎஸ்கே
பகிர்:

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் பந்துவீச்சு, பேட்டிங் என அசத்தலான ஃபர்பாமென்ஸ் வழங்கி வருகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 48.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது, ஆஸ்திரேலியா 185/7 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்ததாக தற்போது பேட்டிங்கில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

ஜேக் எட்வர்ட்ஸ் சமீபத்தில் டிரேடிங் மூலமாக சன்ரைசர்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணியில் இணைந்தார். நாதன் எல்லீஸ், கலீல் அகமது சிஎஸ்கே அணியில் இருந்து சன்ரைசர்ஸ் அணிக்கு மாறினார்கள்.

சிஎஸ்கே அணிக்கு வந்துள்ள லிவிஸ்டனும் நன்றாக விளையாடி வருகிறார். ஜேக் எட்வர்ட்ஸும் அசத்தி வருவதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நேற்று (நவ.17) எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆலோசகராக அணியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Jack Edwards impresses with both bat and ball..! CSK fans delighted!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.