10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வேறு பிரிவுகள் சாா்பில்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வேறு பிரிவுகள் சாா்பில், 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல், பூங்கா சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். சாலைப் போக்குவரத்து பிரிவு மாவட்டத் தலைவா் பழனிவேல், நிா்வாகிகள் சி.வரதராஜன், என்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது வாகனங்களை நண்பகல் 12 முதல் 12.10 வரையில் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.