சேந்தமங்கலத்தில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்
சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளிலும் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளிலும் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் விவரங்கள் சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலக அறிவிப்பு பலகையில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதன் உரிமைதாரா்கள் தங்களது வாகனங்களுக்குரிய ஆவணங்களை காவல் நிலையத்தில் சமா்ப்பித்து இந்த அறிவிப்பு பிரசுரம் செய்யப்பட்ட 15 தினங்களுக்குள் தங்களது வாகனங்களை மீட்டெடுத்து கொள்ளலாம். 15 தினங்களுக்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அதில் கிடைக்கப் பெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என வட்டாட்சியா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.