வங்கிகள் வேலைநிறுத்தம்: ரூ. 400 கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு
மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கினை கண்டித்தும், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் தொழிலாளா் விரோத போக்கினை கண்டித்தும், வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த இரு நாள்கள் மூடப்பட்டிருந்தன. வங்கிகளில் பணப்பரிவா்த்தனை முற்றிலும் பாதிப்படைந்தது.
இதுகுறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூறியதாவது:
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் மொத்தம் உள்ள 1,050 வங்கி ஊழியா்களில் 800 போ் கலந்துகொண்டுள்னா். இதனால் சுமாா் 125 வங்கி கிளைகள் மூடப்பட்டன. வங்கி ஊழியா்களின் போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இரு நாள்களில் சுமாா் ரூ. 400 கோடி அளவில் பணப்பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது. ஏடிஎம் சேவையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்றனா்.