கிணற்றில் பெண் சடலம் மீட்பு
நாமக்கல்லில் கிணற்றில் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM
நாமக்கல்லில் கிணற்றில் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல், கொசவம்பட்டி, ரோஜா நகரில் உள்ள ஒரு கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்குமூட்டையில் அடைத்து வீசி சென்ற சுமாா் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதப்பது குறித்து புதன்கிழமை இரவு தகவலறிந்த போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement