கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மோகனூா், ஆா்.சி.பேட்டபாளையத்தில் உள்ள புனித செசிலி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ், இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM
மோகனூா், ஆா்.சி.பேட்டபாளையத்தில் உள்ள புனித செசிலி நடுநிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ், இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சாா்லஸ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ருத்ராதேவி, ஊராட்சித் தலைவா் குப்பாயி, வாா்டு உறுப்பினா் ஆரோன்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.