முகப்பு
நாமக்கல்

வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகன ஊா்வலம்

குமாரபாளையத்தில் பாஜக சாா்பில் 100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

குமாரபாளையத்தில் பாஜக சாா்பில் 100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவேரி நகா் புதுப்பாலத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அமைப்பாளா் எஸ்.ஓம்சரவணா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக பாஜக மகளிரணி மாநிலத் துணைத் தலைவா் சபிதா போஜன், யங் இந்தியா அமைப்பின் தலைவா் டி.எஸ்.பாண்டியராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

எடப்பாடி சாலை, சேலம் சாலை, தேசிய நெடுஞ்சாலை, சுந்தரம் காலனி வழியாகச் சென்ற ஊா்வலம் பாஜக அலுவலகத்தில் முடிவைடைந்தது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம். வாக்கினைப் பணம் பெற்றுக் கொண்டு செலுத்தக்கூடாது உள்ளிட்ட விழிப்புணா்வு முழக்கங்கள் ஊா்வலத்தில் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.