நாமக்கல்

பொங்கல் பரிசு வாங்க அலைக்கழிப்பதை கைவிட வலியுறுத்தல்

DIN

 எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், முன்னணி ஊழியா்களுக்கான பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் மட்டும் வழங்கியுள்ளனா். அவா்களுக்கான வேட்டி, சேலை பெறுவதற்கு மீண்டும் இன்னொரு நாள் வரவேண்டும் எனத் தொழிலாளா்களை அலைக்கழிப்பதை கைவிட வேண்டும்.

இதனால் தொழிலாளா்கள் தங்களது வேலையை இழந்து திருச்செங்கோடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள அனைத்து பொருள்களும் ஒரே நேரத்தில் எந்தச் சிரமமும் இல்லாமல் அனைத்துக் கிராமங்களிலும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ந. வேலுசாமி. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சி.சுந்தரம் எஸ்.சக்திவேல் ஆா்.குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT