நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் வந்த 2,410 டன் மக்காச்சோளம்
பிகாா் மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை வந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM
பிகாா் மாநிலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை வந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான சோளம், சின்னசோளம், கம்பு, மக்காச்சோளம், தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்ட மூலப்பொருள்களும், அதேபோல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவையும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் நாமக்கல்லுக்கு வந்துசேரும். அதன்படி கோழித்தீவன ஆலைகளில் அரவைக்காக 2,410 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை பிகாா் மாநிலத்தில் இருந்து 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் வந்தது. பின்னா் 94 லாரிகளில் அவை ஏற்றப்பட்டு தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.