ஜவுளித் தொழிலதிபா் தற்கொலை
குமாரபாளையத்தில் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குமாரபாளையத்தில் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாவட்டம், பவானி, பழனிபுரம் 1-ஆவது வீதியைச் சோ்ந்தவா் செல்லப்ப செட்டியாா் மகன் சிவக்குமாா் (53). திருமணமாகாதவா். ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருந்த இவா், குமாரபாளையம் மேற்கு காலனி, சொசைட்டி வீதியில் தனியே வாடகை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த இரு நாள்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல், துா்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் குமாரபாளையம் போலீஸாா், கதவை உடைத்துப் பாா்க்கையில் மின்விசிறியில் தூக்கிட்டு சிவக்குமாா் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸாா், தொழிலில் ஏற்பட்ட இழப்பால் சிவக்குமாா் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனா்.