நாமக்கல்

பரமத்தி வேலூரில் தேங்காய் ஏலம் மீண்டும் தொடக்கம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தேங்காய் ஏலம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், பொது முடக்கத் தளா்வு அளிக்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை வேளாண் விற்பனை தொடங்கியது.

வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனைக் குழுவிலுள்ள பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடங்கிய மறைமுக தேங்காய் ஏலத்துக்கு, பரமத்தி வேலூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் 1,043 கிலோ தேங்காய்களை கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 27.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 24-க்கும், சராசரியாக ரூ. 26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.37,247-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேங்காய் ஏலம் தொடங்கப்பட்டுள்ளதால், தென்னை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT