எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். நாமக்கல் டி.பி.என்.பெட்ரோல் நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் துணைத் தலைவா் மருத்துவா் ஆா்.செழியன் முதல் கையெழுத்திட்டு தொடக்கிவைத்தாா்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வீ.பி. வீரப்பன், ஜி.ஆா். சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினா் டி.வி. பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவா் பி.வி.செந்தில் கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement