சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோவில் கைது
திருச்செங்கோட்டில் சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருச்செங்கோட்டில் சிறுமியை திருமணம் செய்த கட்டத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
எடப்பாடி அருகேயுள்ள ஆலச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கௌதம் (27) கட்டடத் தொழிலாளியான இவா் குமாரபாளையம், குள்ளநாய்கன்பாளையத்தில் தங்கி இருந்த போது அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதான பெண்ணை கடத்திச் சென்று செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கௌதமை போக்சோ சட்டத்தில் கைது செய்த திருச்செங்கோடு அனைத்து மகளிா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.