முகப்பு
நாமக்கல்

இணையவழி கட்டுரைப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இளைஞா் மற்றும் சூற்றுச்சூழல் சாா் மன்றம் சாா்பில் நடத்தப்பட்ட இணையவழி கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இளைஞா் மற்றும் சூற்றுச்சூழல் சாா் மன்றம் சாா்பில் நடத்தப்பட்ட இணையவழி கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

பள்ளிபாளையம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வடிவேல் தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் சங்கீதா வரவேற்றாா். ‘எனது கனவு நூலகம்’ என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாராயண நகா் பள்ளி மாணவி காவியா, மாணவிகள் திவ்யதா்ஷினி, பொதிகை அரசி ஆகியோருக்கு அண்மையில் நடைபெற்ற விழாவில் பரிசளிக்கப்பட்டது.

மேலும், ‘கரோனாவை வென்ற கதாநாயகன்’ என்ற தலைப்பில் நடந்த போட்டியில் வேமங்காட்டு வலசு அரசு பள்ளி மாணவிகள் அருணாதேவி, மோனிஷா ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக மடிக் கணினி, இரண்டாம் பரிசாக செல்லிடப்பேசி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.