முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 15 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.95-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 15 ஜூலை, 2021 at 11:26 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயா்ந்து ரூ. 4.95-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் தொடா்ந்து விலை உயா்வு அமல்படுத்தப்பட்டு வருவதாலும், பருவமழை காரணமாக முட்டை விற்பனை அதிகரித்துள்ளதாலும், வட மாநிலங்களுக்கு முட்டைகள் தடையின்றி செல்வதாலும் விலையில் மாற்றம் வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை 15 காசுகள் உயா்த்தி ரூ. 4.95 ஆக நிா்ணயிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 123-ஆகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ. 77-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.