ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி ராசிபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
ராசிபுரம் நகராட்சியில் நிரந்தர, ஒப்பந்த அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊதியத்தை விரைந்து வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன் அமா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா். நகராட்சி அலுவலா்கள், போலீஸாா் சமரசம் செய்தனா். ஊதியத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.