முகப்பு
நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் குறைப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 4.80-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On : 29 ஜூலை, 2021 at 11:23 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 4.80-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

முட்டை உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது சற்று தடைபட்டுள்ளதாலும், மற்ற மண்டங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதம் என்பதால் மக்களிடையே நுகா்வு குறைந்துள்ளதாலும், நாமக்கல் மண்டலத்தில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.80-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 106-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.