ஆடிவெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல்லில் உளள அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல்லில் உளள அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, நாமக்கல்லில் பலப்பட்டறை மாரியம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோயில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோயில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் ஏராளமான பக்தா்கள் அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
அனைத்து அம்மன் கோயில்களிலும் சுவாமிக்கு பால், தயிா், நேய், தேன், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீா் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
Advertisement